டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

by Admin / 31-08-2026 01:41:57pm
 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு  ஊதிய உயர்வு

இன்று சட்டப்பேரவையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஊதிய உயர்வு அமலாக உள்ளதாக மதுவிலக்கு 120 அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். அத்துடன் டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி விலையில் நிதி மீறல்கள் அல்லது முறைகேடுகள் இருந்தால் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 23 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியர்களின் மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து இருபத்தி மூன்று ரூபாயையும் விற்பனையாளர்களுக்கு 30 ஆயிரத்து 784 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 ரூபாயும் அதிகரிக்க உள்ளதாகவும் சம்பள உயர்வு மட்டும் இன்றி ஊழியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பண்டிகை முன்பணம் 20,000 வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு மூன்று சீருடைகளுக்கான துணி தையல் செலவுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஊழியர்கள் சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்றும் தகுதியுடைய 280 டாஸ்மாக் பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடைகளை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு பராமரிப்பு செலவினமாக மாதம் தோறும் மாநகர கடைகளுக்கு 5000 ரூபாயும் நகராட்சி பேரூராட்சி கலைகளுக்கு நாலாயிரம் ரூபாயும் கிராமப்புற கடைகளுக்கு 3000 ரூபாயும் நிதி வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் கடை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பெற்றால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்து உள்ளார்.

 

Tags :

Share via
Logo