திருட்டு வழக்கில் கைது செய்த கைதி தப்பி ஓட்டம்.

by Editor / 29-09-2024 10:35:15pm
திருட்டு வழக்கில் கைது செய்த கைதி தப்பி ஓட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மூன்று பேர் நேற்று இரவு நேரத்தில் திருட முயற்சித்தபோது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கைதிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகிய இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போதும் பெங்களூரு பகுதியை சேர்ந்த ராஜா (30) என்ற கைதி தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போதும் கைதி தப்பித்தது எப்படி என்று தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

Tags : திருட்டு வழக்கில் கைது செய்த கைதி தப்பி ஓட்டம்.

Share via

More stories

Logo