திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை.*

இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்காலிகமாக கிழக்கு திசை காற்று வீச துவங்கியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் நாளை வரை பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று இரவு சுமார் 9 மணி அளவில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உடன்குடி, பரமன்குறிச்சி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டிணம், ஆத்தூர், மணப்பாடு, முக்காணி பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுமுகநேரி மூலக்கரை சாலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இரவு நேரம் என்பதால் சாலைகளில் வந்த வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. கனமழை காரணமாக மின்சாரம் தடைபட்டது.
Tags : திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை.