ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

by Staff / 22-05-2023 02:22:51pm
ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தமிழகம் முழுக்க உணவு டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உணவு சேவை பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற முறையை திரும்ப பெற வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ30, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும் என ஸ்விகி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 'டர்ன் ஓவர்' தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

Tags :

Share via