சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய கொடைக்கானல்

by Staff / 12-10-2024 04:40:36pm
சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய கொடைக்கானல்

ஆயுத பூஜை, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். ஆனால், அங்கு கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது, அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலைகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.
 

 

Tags :

Share via