இந்தியாவில் இருந்து தடையியல் மற்றும் மருத்துவக் குழு நேபாளம் சென்றுள்ளது.

by Admin / 31-08-2026 12:15:53am
இந்தியாவில் இருந்து தடையியல் மற்றும் மருத்துவக் குழு நேபாளம் சென்றுள்ளது.

நேபாள- சீன எல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று பணிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக இந்தியாவில் இருந்து தடையியல் மற்றும் மருத்துவக் குழு நேபாளம் சென்றுள்ளது.. வெள்ள இடிபாடுகளுக்கு இடையில் மீட்கப்பட்ட பல உடல்கள் சிதைந்து அழுகிய நிலையிலும் இருப்பதால் அவற்றை அடையாளம் காண முடியாமல் இருப்பதால் நேபாள அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியா தேசிய தடையியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் 11 பேர் கொண்ட நிபுணர் குழுவை காத்துமாண்டுக்கு அனுப்பி உள்ளது.. இக்குழுவினர் அங்கு தற்காலிக ஆய்வுக்கூடங்களை அமைத்து உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து உறவினர்களின் ரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு டிஎன்ஏ சரிபார்க்கப்பட்டு உடல்கள் துல்லியமாக அடையாளம் காணப்படும் முறையில் இந்த குழு அதற்கான பணிகளைச் செய்யும். தற்பொழுது சித்துவான் உள்ளிட்ட மருத்துவமனைகளில் உடல்களை பாதுகாக்க போதிய குளிரூட்டும் வசதிகள் இல்லாதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் அடையாளக் குறிகளை சேகரித்த பிறகு உழல்கள் தற்காலிகமாக புதைக்கப்பட்டு வருகின்றன டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போனவுடன் உடல்கள் உறவினர்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முறையான இறுதிச் சடங்குகளை செய்ய இந்த மரபணு பரிசோதனை பெரும் உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo