பிரதமர் நரேந்திர மோடி -உஸ்பெகிஸ்தான் அதிபர்ஷவ் கத் மிர்சியோயேவ்  முன்னிலையில் 11 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

by Admin / 31-08-2026 01:00:33am
 பிரதமர் நரேந்திர மோடி -உஸ்பெகிஸ்தான் அதிபர்ஷவ் கத் மிர்சியோயேவ்  முன்னிலையில் 11 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி -உஸ்பெகிஸ்தான் அதிபர்ஷவ் கத் மிர்சியோயேவ்  முன்னிலையில் 11 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களின் படி, இந்திய அணுசக்தி திட்டங்களுக்கு நீண்டகால அடிப்படை யுரேனியம் வழங்குவதற்கான ஒப்பந்தம், ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகள் உற்பத்தி துறை சார்ந்த ஒத்துழைப்பு, பண பரிவர்த்தனை சேவையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், உயர்கல்வி மேம்பாடு, கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் மற்றும் ஆவண காப்பக பணிகளில் கூட்டு ஒத்துழைப்பு,  இரு நாட்டு சுற்றுலா மேம்பாடு மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள பழங்கால பௌத்த தலங்களை பாதுகாத்து புனரமைத்தல், குஜராத் மாநிலத்திற்கும்  உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டு பகுதிக்கும் இடையே சகோதர  உறவை வலுப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக மதிப்பான ஒரு பில்லியனை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 பில்லியனாக உயர்த்த இலக்கு நியமிக்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருதான 'ஒலி தராஜலி தஸ்த்லிக் விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது.

 பிரதமர் நரேந்திர மோடி -உஸ்பெகிஸ்தான் அதிபர்ஷவ் கத் மிர்சியோயேவ்  முன்னிலையில் 11 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
 
Tags :

Share via

More stories

Logo