இன்னும் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது - ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ. 7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக அறிவித்துள்ளது.புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது போது பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 3.56 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96 சதவீத ₹2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல்.கைவசம் உள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தல்.
Tags : இன்னும் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது - ரிசர்வ் வங்கி