கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் வீரியமாக இருக்கிறது. மக்கள் அனைவரும் பீதியில் இருக்கின்றனர். தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடி 4 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இரண்டாம் அலையே கோர தாண்டவம் ஆடுகையில் மூன்றாம் அலை எப்போது வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசின் அரசியல் ஆலோசகர் எச்சரித்திருக்கிறார்.
தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றாலும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தத் தட்டுப்பாடானது ஜூலை மாதம் வரை நீடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இச்சூழலில் கொரோனா பரவலின் சங்கிலி தொடரை உடைக்க முழு ஊரடங்கு என்ற தற்காலிக தீர்வை மாநில அரசுகள் கையிலெடுத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது கேரளாவும் முழு ஊரடங்கை பிறப்பித்திருக்கிறது. மே 8ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 953 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலைக் குறைப்பதற்காகவே இந்த் முடிவை எடுத்திருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Tags :