ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி

by Editor / 10-06-2025 04:15:50pm
ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி

ராஜஸ்தான்: டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் இன்று மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 பேர் கொண்ட குழு ஜெய்ப்பூரிலிருந்து சுற்றுலாவிற்கு வந்த நிலையில், குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது ஆழமான நீரில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில், 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via