விருதுநகர் ரயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட கட்டண பயணிகள் காத்திருப்பு அறை

by Staff / 27-06-2025 11:56:22pm
விருதுநகர் ரயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட கட்டண பயணிகள் காத்திருப்பு அறை

விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில்  குளிரூட்டப்பட்ட பயணிகள் கட்டண காத்திருப்பு அறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  இந்த காத்திருப்பு அறையை பயணிகள் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 25 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த காத்திருப்பு அறை சுமார் 29 சதுர மீட்டரில் அமைந்துள்ளது. இதில் பயணிகள் நல்ல ஓய்வு எடுக்க 19 மெத்தை சூழ்ந்த இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு பயணிகள் தங்களது அலைபேசி மற்றும்  மடிக்கணினிகளை மின் சக்தியூட்டும் வசதி, பொழுதுபோக்க செய்தித்தாள்கள், வார இதழ்கள் ஆகியவையும் உள்ளன. ஆண் மற்றும் பெண் பயணிகளுக்கு தனித்தனியாக இந்திய மற்றும் மேற்கத்திய பாணி கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளுடன் கழிப்பறை மற்றும் குளியல் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு அறையை  ஒப்பந்ததாரர் ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை செய்து வருகிறார்.

 

Tags : விருதுநகர் ரயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட கட்டண பயணிகள் காத்திருப்பு அறை

Share via