பள்ளி மாணவி திடீர் மரணம் போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகில் உள்ள வானரமுட்டியைச் சேர்ந்தவர் சுரேந்திரன், இவர் கழுகுமலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின் (7), அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது.இதையடுத்து மாணவியை கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இது குறித்து சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்குப் பதிந்து விாசரணை நடத்தி வருகிறார். மாணவியின் உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags :