திருப்பதி உண்டியல் காணிக்கை 114 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருவது வழக்கம் அவற்றை திருப்பதி கோவில் தேவஸ்தானம் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உண்டியல் காணிக்கை 114.12 கோடி ரூபாய் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 14 மாதங்களாக மாதந்தோறும் 100 கோடிக்கும் அதிகமாக பக்தர்கள் தங்களது காணிக்கை செலுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.
Tags :