வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள்... பஞ்சாப் முதலமைச்சர் வலியுறுத்தல்...
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் உள்பட சில மாநில விவசாயிகள், டெல்லி எல்லையில், கடந்த, நவம்பவர் மாதத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, பேசிய அவர், விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சமூக ரீதியிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுடைய நலனுக்கு எதிரானதாக உள்ளதாக விவசாயிகள் கருதுவதால், இந்த சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அமரீந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தங்கர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தலின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.
Tags :