ஏரிகளில் நீர்வரத்து நிலவரம்;
புழல் ஏரியின் நீர் வரத்து குறைந்தது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2786 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நேற்று 730 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 475 கன அடி நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 209 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 1081 மில்லியன் கனடியில் 184 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 223 கன அடியாக நீர் வரத்து வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 313 கன அடியாக அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது
................................
பூண்டி ஏரியின் நீர் வரத்து குறைந்தது.
பூண்டி ஏரியின் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 1436 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று வினாடிக்கு 3440 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 2630 கன அடியாக குறைந்தது. சென்னை குடிநீருக்காக 270 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது
கண்ணன் கோட்டை ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
கண்ணன்கோட்டை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 325 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு நேற்று 30 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் 15 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது
Tags : ஏரிகளில் நீர்வரத்து நிலவரம்;