பல்லடம் அருகே மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்-14 தனிப்படைகள் அமைப்பு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட பழைய வழக்குகளில் தொடர்புடைய 850 பேரின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி பதிவு,பழைய குற்றவாளிகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொள்ளைக்காக நடந்த கொலையா..? அல்லது முன்விரோதத்திற்காக இந்த கொலை நடந்ததா..? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது எனவும் தற்போது வரை 14 தனி படைகள் அமைக்கப்பட்டு, துரிதமாக விசாரணை நடந்து வருவதாகவும்
படுகொலை செய்யப்பட்டவர்களின் தோட்டத்தில் பணியாற்றி வந்த நபர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் அந்த நபரையும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததாகவும், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தை பார்க்கும்போது சென்னிமலை, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலையுடன் தற்போது இந்த கொலையை ஒப்பிட்டதில் ஒரே மாதிரியான கொலை என்பது தெரியவந்துள்ளதாகவும்.
இருப்பினும் கடந்த ஐந்து நாட்களாக மூன்று பேர் கொலை வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத இருந்த நிலையில் இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2011 முதல் 2024 வரை பதிவான கொலை வழக்குகளின் விவரங்களை பெற்று இதில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இது தவிர தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற பதிவேடுகளில் இருந்து 850 பேரின் விவரங்களை பெற்று அதனுடன் பொருத்தி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : பல்லடம் அருகே மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்-14 தனிப்படைகள் அமைப்பு.