மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழந்தவர்களது உடலுக்கு அமைச்சர் அஞ்சலி.செலுத்தினார்.
பெஞ்சள் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை எதிரொலியாக அண்ணாமலையார் மலை மீது கடந்த ஒன்றாம் தேதி மண் சரிவு ஏற்பட்டு இரண்டு வீடுகளுக்கு மேல் மண் சரிந்து விழுந்தது.
இதில் ஒரு வீட்டில் ஏழு நபர்களின் மேல் மண் சரிந்து விழுந்ததில் மண்ணிற்குள் ஏழு நபர்கள் சிக்கிக்கொண்டனர். கடந்த 34 மணி போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை அனைவரின் உடல்கள் மண்ணில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து நேற்று இரவு ஏழு நபர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மண்ணில் புதைந்து இறந்த ஏழு நபர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுத பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது கைகுட்டையால் கண்ணீரை துடித்துக் கொண்டார்.
Tags : மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழந்தவர்களது உடலுக்கு அமைச்சர் அஞ்சலி.செலுத்தினார்.