சாதி மறுப்பு திருமணம்:தனிப்படை இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

சாதி மறுப்பு திருமணம்:தனிப்படை இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.ருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 20. ) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில் கடந்த 1 ½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் கடந்த 14 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக மதுரை அருகே இலுப்பைக்குளத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி பெண்ணின் உறவினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞருமான அருணகிரி உள்ளிட்ட சிலர் இலுப்பைக்குளம் சென்று காதலர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி வந்துள்ளதோடு சாதி பெயரை சொல்லி சந்தோஷை கடுமையாக தாக்கி செல்போன் 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு சந்தோஷின் மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலமாக தாக்கி விட்டு துவரங்குறிச்சி அருகே உள்ள மோர்ணிமலை என்ற இடத்திற்கு அவரின் பெற்றோரை வரச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருணகிரி உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். அனைவரும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) பாலாஜி ஆஜர்படுத்தினர். மூவரையும் வருகிற 30 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சாமிக்கண்ணு, கணபதி, கண்ணன், தர்மர் ஆகிய நான்கு பேரையும் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதில், தலைமறைவான 4 பேரை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து தனிப்படை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tags : சாதி மறுப்பு திருமணம்:தனிப்படை இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.