பிரபல பாலிவுட் இயக்குநர் பர்தோ கோஷ் காலமானார்

by Editor / 09-06-2025 01:14:43pm
பிரபல பாலிவுட் இயக்குநர் பர்தோ கோஷ் காலமானார்

பிரபல பாலிவுட் இயக்குநர் பர்தோ கோஷ் (75) இன்று காலமானார். சிறிது காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை மும்பையில் காலமானார். அவரது மனைவி கௌரி கோஷ் இதனை உறுதிபடுத்தியுள்ளார். இவர், 100 நாட்கள், தலால், அக்னி சாக்ஷி மற்றும் கீத் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். மொத்தம் 15 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டில் "மௌசம் இக்ரர் கே தோ பால் பியார் கே" என்ற படத்தை இயக்கினார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via