திருவொற்றியூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

by Staff / 08-03-2024 01:01:23pm
திருவொற்றியூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது நண்பருடன் முடிச்சூரில் இருந்து திருவெற்றியூர் வீட்டிற்கு இன்டிகோ காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இராயபுரம் எம்.எஸ் கோயில் பகுதியில் சென்றபோது திடீரென கார் முன்பகுதியில் புகைவர துவங்கியது. ஓடும் காரில் புகை வந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன், சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்தினார்.

இதையடுத்து ஓட்டுனர் பார்த்திபனும் அவரது நண்பரும் கிழே இறங்கினர். காரில் இறங்கிய சில நொடிகளில் காரின் முன்பகுதி முழுவதுமாக தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் அப்பகுதிமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து இராயபுரத்திலிருந்து வந்த தீயணைப்பு வாகனம் காரில் ஏற்பட்ட தீயை உடனடியாக அனைத்தது.இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தீ பிடித்த காரணம் குறித்து இராயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories