பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து: முதல்வர்

by Editor / 04-09-2021 11:01:55am
பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து: முதல்வர்

நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரியை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பேரவையில் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த பேரவை கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும்.

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று , நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து கொண்டுவரப்படும் பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து செய்யப்படும்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via