பாஜக எம்பி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
கர்நாடகாவின் சாமராஜநகரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான வி.ஸ்ரீனிவாச பிரசாத் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீனிவாச பிரசாத் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், நலிந்த பிரிவினரின் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சமூக நீதிக்காகப் போராடியவர். அவரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :