தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்-கனமழை பெய்யவாய்ப்பு.

by Editor / 22-11-2022 08:28:03am
தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்-கனமழை  பெய்யவாய்ப்பு.

மேற்கு வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்; சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்-கனமழை  பெய்யவாய்ப்பு.
 

Tags :

Share via