மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

by Staff / 31-03-2024 05:31:32pm
மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் டேராடூனில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று (மார்ச்.31) அதிகாலை காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மொராதாபாத்தில் உள்ள காந்த் பகுதி அருகே எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் மயங்கியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories