மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு.
பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பலத்த மழை வெளுத்து வாங்கியது.இதனால் அண்ணாமலையார் மலையில் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவினால் வ.உ.சி நகர் 11வது தெருவில் உள்ள இரண்டு வீடுகளுக்கு மேல் விழுந்ததில் ராஜ்குமார், மீனா, கௌதம், இனியா, வினோதினி, மகா மற்றும் ரம்யா ஆகியோர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏழு நபர்களின் உடல்களை மீட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதி உள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். மேலும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Tags : மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு.