தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Staff / 22-06-2025 12:03:57pm
 தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :  தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Share via