வேளாண் பட்ஜெட் குறித்து அண்ணாமலை கருத்து

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கிறது. திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :