பொங்கல் பரிசுத் தொகுப்பு - ரூ.1,000 ரொக்கப்பணம்- இன்று முதல் டோக்கன் வினியோகம்.

by Editor / 07-01-2024 10:06:20am
 பொங்கல் பரிசுத் தொகுப்பு - ரூ.1,000 ரொக்கப்பணம்- இன்று முதல் டோக்கன் வினியோகம்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு இன்று முதல் டோக்கன் வினியோகம் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.1,000 ரொக்கப்பணம், பொங்கல் சிறப்பு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. டோக்கனில் இடம்பெற்றுள்ள தேதியில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்கள் பரிசுத்தொகுப்பு, ரொக்கப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags : இன்று முதல்

Share via