மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை போலியாக தயாரித்தவர் கைது

வேலூர் மாவட்டத்தில் போலியாக மருத்துவர் சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை போலியாக தயார் செய்வதாகவும், மோசடியில் ஈடுபடும் நபர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க கோரிய புகாரின் பேரில் கடந்த 25.04.22 ஆம் தேதி 8 நபர்கள் மேல் வழக்கு பதிவு செய்து அதில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்கள். இன்று 14.7.22 ம் தேதி போலி மருத்துவ சான்றிதழ் பெற்று போலி மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கிய ஆவின் பாஸ்கர் என்பவர் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதி துறை நடுவர் எண் 1, வேலூர் முன் ஆஜர் செய்து சிறையில் அடைக்க பட்டுள்ளார்.
Tags : The person who forged the disabled identity card was arrested