இறுதி முடிவை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் முறைப்படி அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

by Admin / 07-02-2026 12:21:35pm
இறுதி முடிவை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் முறைப்படி அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையில் எல்லா கட்சிகளுமே எங்களுக்கு தோழமை கட்சிகள் தான் என்றும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே திமுகவை தங்கள் கூட்டணிக்கு அழைக்கின்றனர் இரண்டு கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தங்களுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக இரு தரப்பிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த இறுதி முடிவை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் முறைப்படி அறிவிப்பதாகவும் கூறியதோடு தேமுதிக தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளது என்பதை காட்டும் வகையில் பிப்ரவரி 12ஆம் தேதி வரை 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழலில் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்ல.

 

Tags :

Share via

More stories