மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்: குஷ்பு
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை கொலை தொடர்பாக மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தி உள்ளார். மேலும் இதுகுறித்து அவர், "முதல்வராக மம்தா தொடர்வதற்கு தகுதி இருக்கிறதா? என்பதே என் கேள்வி. மேற்குவங்க விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாய் திறக்கவில்லை. ராகுல் காந்தி ஏன் பேசாமல் இருக்கிறார்? பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்?" என்று அடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Tags :