சென்னையில் ஒருவார சோதனை: 84 பேர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடந்த 7 நாட்களில் சென்னை முழுவதும் 84 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு தடை செய்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் நபர்கள் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் உத்தரவுப்படி போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 26ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான 7 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வியாபாரிகள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 78. 2 கிலோ குட்கா பொருட்கள், 71. 4 கிலோ மாவா, ரூ. 13, 900 மற்றும் 3 பைக், ஒரு செல்போன், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
Tags :