3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம்

by Editor / 17-07-2024 11:41:52am
 3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.நடப்பு ஆண்டில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருவாரூர் நன்னிலம் குடவாசல், மன்னார்குடி ஆகிய வட்டாரங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்சமயம் பருத்தியில் முதல் சுற்று பஞ்சு எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் விற்பனைக் குழுவில் உள்ள திருவாரூர்,குடவாசல், வலங்கைமான், மூங்கில்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் திருநெய்பேர், அடியக்கமங்கலம், மாங்குடி, ஒடாச்சேரி, வடகண்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3696 விவசாயிகள் கலந்து கொண்டு,4856 குவிண்டால் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு வைத்திருந்தனர்.

இந்த ஏலத்திற்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்தும்  ராஜபாளையம், விழுப்புரம், செம்பனார்கோவில்,தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து இருந்தனர். விற்பனைக்குழு செயலாளர் (பொறுப்பு) மல்லிகா முன்னிலையில் மறைமுக ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் பருத்தி விலை அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 49 ரூபாய்க்கு குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 216 ரூபாய்க்கும்,சராசரியாக பருத்தி குவிண்டால் 6 ஆயிரத்து 678 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதில் 3 கோடியே 21 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 4 ஆயிரத்து 856 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டது.
 

 

Tags : திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம்

Share via