முக்கோணக் காதல்.. ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் இளைஞர் சடலம்.. 6 பேர் கைது

திரிபுராவில் உள்ள தலாய் மாவட்டத்தில் முக்கோணக் காதல் காரணமாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாரிஃபுல் இஸ்லாம் (24) என்ற இளைஞருக்கும், 20 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், பெண்ணின் உறவினரான மருத்துவர் திபகர் சஹா (28) என்பவருக்கு தெரியவருகிறது. இவர், அப்பெண்ணை ஒருதலையாக விரும்பி வந்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த சஹா, சாரிஃபுல்லை கொடூரமாக கொலை செய்து, ஐஸ்கிரீம் ஃப்ரீசரில் வைத்துள்ளார். இதில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :