சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நரசிங்கி சிபிஐடி கல்லூரி அருகே லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரு மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் சடலங்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :