கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.

நாமக்கல் அருகே கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயிரிழந்த சிறுமி தஸ்மிதாவின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags : கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.