காதலன் கொலை காதலியின் தாயார் மீது வழக்கு பதிய கோரி போராட்டம்.

by Staff / 17-09-2025 10:07:10am
காதலன் கொலை காதலியின் தாயார் மீது வழக்கு பதிய கோரி போராட்டம்.

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது காதலி மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிய வலியுறுத்தி வைரமுத்துவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் மாலினி, வைரமுத்துவின் குடும்பத்தார், உறவினர்கள் சுமார் 50 பேர் அரசினர் மருத்துவமனை சவக்கிடங்கு அருகில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.
 

 

Tags : காதலன் கொலை காதலியின் தாயார் மீது வழக்கு பதிய கோரி போராட்டம்.

Share via