ஏ.எஸ்.பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் - முதலமைச்சர் அதிரடி
விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதில் அளித்த அவர், இந்த வழக்கு குறித்து விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏ எஸ் பி பல்வீர் சிங் உள்ளிட்ட பலர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் இந்த அரசு எந்தவித சமரச நடவடிக்கைகளிலும் மேற்கொள்ளாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
Tags :