அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்தவர்கள் கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா எருமைப்பட்டி கிராமத்தில் வெடி கடை நடத்தி வருபவர் சண்முகம வயது 62, இவரது வீட்டில் வீட்டில் அனுமதி இன்றி வெடி தயாரிக்கப்படுவதாக தகவல் அறிந்த கபிஸ்தலம் காவல்துறையினர் சோழங்க நத்தத்தில் உள்ள சண்முகம் வீட்டில் காவல் ஆய்வாளர் முன்னிலையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அனுமதி இன்றி வெடி தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.அதனைத் தொடர்ந்து சோழங்கநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம், வெடி தயாரிக்கும் தொழிலாளர்கள் வலங்கைமான் புங்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழ்வாணன் வயது 29, எருமைப்பட்டி பொன்பேத்தியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன் வயது 17, ஆகிய மூவரையும் கபிஸ்தலம் காவல்துறை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் வெடி தயாரிக்க பயன்படுத்திய மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags :