அனுமதி இன்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள அரும்பாவூர் போலீசார் தீவிர சாராய பேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கோரையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் யாரேனும் சாராயம் காய்ச்சுகின்றனரா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோரையாறு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் வயது 35 என்பவர் அனுமதி இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து விசுவநாதனை போலீசார் கைது செய்தனர், மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர், பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
Tags :



















