by Editor /
29-06-2023
07:57:08am
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இயங்கி வரும் பிரபலமான தனியார் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமராவை மறைத்து வைத்து படம் பிடிக்க முயன்ற கடையின் ஊழியர்கள் நெற்குணம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25), அவரை காப்பாற்ற முயன்ற தங்கை உதயா (22), கடையின் மேலாளர் ஏழுமலை (31) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் செல்போனை சபல புத்தியால் உடைமாற்றும் அறையில் வைத்ததை விக்னேஷ் ஒப்புக்கொண்டார். செல்போன் தனது சகோதரனுடையது என தெரியவந்ததால், அதனை பறித்ததுடன், மெமரிகார்டை எடுத்து அவரை காப்பாற்ற முயன்றதாக உதயா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Tags :
Share via