அஞ்சலை அம்மாள் அறிவுலக கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் 45 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் 250 படுக்கைகள் வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 99.76 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 190 குடியிருப்புகளைக் கொண்ட அரசு பணியாளர்களுக்கான புதிய அடுக்குமாடி “C” வகை குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றையும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 35 மாவட்டங்களில், 217 அரசுப் பள்ளிகளில் 296.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1232 வகுப்பறைக் கட்டடங்கள், 9 ஆய்வகக் கட்டடங்கள், 24 குடிநீர் வசதிகள், 60 கழிவறைகள் மற்றும் 500 மீட்டர் சுற்றுச்சுவர், பொது நூலக இயக்ககம் சார்பில் 5.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இராணிப்பேட்டை மைய நூலகம் மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்து, கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலக கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
Tags :


















