தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள மசோதாக்கள் குறித்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில், புதிதாக தொழில் தொடங்க பெரு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, மகளிர் உரிமைத் தொகை வேண்டி மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கும் தொகை வழங்குவது உள்ளிட்டவற்றிக்கு ஒப்புதல் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
Tags :