த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை

by Admin / 27-02-2026 03:16:08am
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் கட்சித் தலைமையில் முன் அனுமதி என்று ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது என்றும்  தொலைக்காட்சி விவாதங்கள்,நேரடி பேட்டிகள் மற்றும் யூடியூப்  சேனல் நேர்காணல்கள் என அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் பொருந்தும் என்றும் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் நிர்வாகிகள் சிலர் தடுமாறுவதும் அவை சமூக வலைதளங்களில் கேலிச்சித்திரங்களாகவும் வீடியோக்களாகும் பகிரப்பட்டு கட்சியின் கெளரவத்தை பாதிப்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சியின் கொள்கை முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்த உத்தரவின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via

More stories

Logo