உல்லாசத்துக்கு மறுத்த திருநங்கை.. மதுபாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்த்தவர் கைது

கடலூர்: பி.முட்லூர் டாஸ்மாக் கடை அருகே சவுக்கு தோப்பில் திருநங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், கொ.பாளையத்தை சேர்ந்த காவியா என்ற கவியரசன் (40) என்பது தெரியவந்தது. இவரை கொலை செய்த வசந்தராஜாவை (19) கைது செய்தனர். காவியாவிடம் ரூ.200 கொடுத்து உல்லாசத்துக்கு அழைத்ததாகவும், வர மறுத்ததோடு தன்னை எட்டி உதைத்ததாகவும் கூறியுள்ளார். ஆத்திரத்தில் மதுபாட்டிலை உடைத்து குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags :