இன்று கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகிறாா்.

by Admin / 26-02-2026 09:50:55am
இன்று கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகிறாா்.

 

 

கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை இந்தியா ,ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்,அவர் முதலில் மும்பை வந்தடைந்து அங்கு முன்னணி இந்திய தொழிலதிபர்களை சந்திப்பார்.. பின்னர் புது டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இரு தலைவர்களும் வர்த்தகம் பாதுகாப்பு ,ஆற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 2030 ஆண்டிற்குள் 70 பில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகளை விரைவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த நெருக்கடிகளுக்கு பிறகு கனடாவின் புதிய அரசாங்கத்தின் கீழ் நடைபெறும் இந்த பயணம் இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது .இந்த பயணத்தின் மூலம் கனடா- இந்தியா இடையிலான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு கணிசமாக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

 

 

 

 

 

Tags :

Share via

More stories