தமிழக முதலமைச்சர் விஜய் ஆசிரியர்கள்- விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.

by Admin / 02-09-2026 05:40:04pm
தமிழக முதலமைச்சர் விஜய் ஆசிரியர்கள்- விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.

இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் 110 விதியின் படி 2021 ஆண்டிலிருந்து 2026 ஏப்ரல் வரை போராடிய ஆசிரியர்கள் விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தார். திருவண்ணாமலை சிப்காட் தொழில்பேட்டைக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அவர்கள் மீதான குண்டச்சட்ட நடவடிக்கைகள் ,பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிராக விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் காக்க போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள், ஆசிரியர்கள் தங்களின் நியாயமான உரிமைக்காக ஜனநாயக முறையில் போராடி நீதிமன்ற வழக்குகள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் மனிதனை அடிப்படையில் ஜனநாயக கொள்கைகளை பாதுகாக்கும் நோக்கிலும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கைகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது இதுவே முதல் முறை என்று பொதுப்பணி துறை அமைச்சர் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சியில் இது போன்று பல்வேறு வழக்குகள் போடப்பட்டவைகளை எல்லாம் எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் ஆட்சியில் ரத்து செய்து இருக்கின்றோம் அது 110 விதியின் அடிப்படையில் இல்லை. பொதுவாக அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டு சபையில் தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய் ஆசிரியர்கள்- விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.
 

Tags :

Share via

More stories

Logo