சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிதனி தீர்மானம்- தமிழக முதலமைச்சர் விஜய்

by Admin / 03-09-2026 12:19:54pm
 சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிதனி தீர்மானம்- தமிழக முதலமைச்சர் விஜய்

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிதனி தீர்மானம் ஒன்றை முன்னெடுத்தார். அதற்கு திமுக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை அளித்தன. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க மத்திய அரசும் குடியரசு தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் அனைத்து தீர்ப்புகளும் தமிழில் கிடைக்க பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மொழிபெயர்ப்பு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதினால் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 கீழ் மாநில ஆளுநர் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டதோடு கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் ஆண்டு இதேபோன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தமிழக முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழை வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டு வருவதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என்றும் அது பற்றிய விரிவான விளக்கத்தினை முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதியும் இது திமுக பெற்றெடுத்த குழந்தை என்பதனால் ஆதரிக்கிறோம் என்றும் திமுக கொறடா எ. வ. வேலு மத்திய அரசுக்கு கோரிக்கையாக தான் வைக்க முடியுமே தவிர அதை சட்டமாக்க அனுமதி அளிப்பது அவர்கள் கையில் தான் உள்ளது என்பதையும் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தினர். அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் ஆகியோர் இதற்கு வரவேற்பு தெரிவித்ததோடு முந்தைய அதிமுக ஆட்சியில் இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். அத்துடன் சி.வி. சண்முகம் இதுவரையிலும் மெட்ராஸ் ஹைகோர்ட் என்று தான் இருக்கிறதே தவிர சென்னை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றப்பட வேண்டும் என்கிற கருத்தையும் வலியுறுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் சௌமியா அன்புமணியும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த நெல்மணிகள்களின் பெயர்களை  மாடுகளின் பெயர்களையும் வாசித்து இன்று அது புழக்கத்தில் இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமலை முதன்மை மொழியாக கொண்டு வருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories

Logo