5 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர்

by Staff / 28-04-2024 03:40:02pm
5 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர்

5 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அச்சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நெகிழ வைத்தார். கோலாப்பூரில் உள்ள அனந்த்புரம் குடியிருப்பு பகுதியில் ரிதன் சார்லா என்ற சிறுவன் தனது 5வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என விருப்பம் விருப்பம் தெரிவித்தான். இந்நிலையில், கோலாப்பூரில் பிரதமர் மோடியின் பேரணியைத் தொடர்ந்து சிறுவன் ரிதனின் பிறந்த நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு சிறுவனுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்வித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo