கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

by Staff / 12-09-2022 01:52:58pm
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்றும் நான்கு ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகளுக்கான 2022 - 23ம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via